தந்தையின் தகாத உறவுப்பெண்ணை நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டிய மகன்: பகீர் சம்பவம் (வீடியோ)

திருப்பூர் : தந்தையுடன் தகாத உறவை வைத்திருந்த பெண்ணை, பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர் : தந்தையுடன் தகாத உறவை வைத்திருந்த பெண்ணை, பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி துரை. இவரது மனைவி ரத்தினம் மற்றும் மகன் அருண். கடந்த ஒரு வருடமாக துரை தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக ரங்கநாயகி என்ற பெண்ணுடன் அவருக்குத் தவறான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை துரையை மகன் அருண் எச்சரித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல்நிலையத்தில் மனைவி ரத்தினமும் புகார் அளித்திருந்தார்.



இந்த நிலையில், இன்று விசாரணைக்காக வந்த ரங்கநாயகியை, திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் நின்றிருந்த அருண், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றார். ரங்கநாயகி போட்டக் கூச்சலையடுத்து, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அருணிடம் இருந்த அரிவாளைப் பிடுங்கி திருப்பூர் வடக்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். ரங்கநாயகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...