கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள குட்டையூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர், கோவையில் உள்ள சூலூர் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு உடல் நலக்குறைவால் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியைக் காண்பதற்காக வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் கலைந்து சிதறிக் கிடந்த நிலையில், வீட்டினுள் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஏழு சவரன் தங்க நகை மற்றும் ரூ. 30,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காரமடை காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.