கோவை: பொருளாதாரத்தின் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை தடகள கிளப் மற்றும் கோவை விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளையும் இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தியது. வ.உ.சி., மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் 10 கி.மீ., 05 கி.மீ., மற்றும் 03 கீ.மீ., என்ற பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியானது, நேரு மைதானத்தில் இருந்து, ஏ.டி.டி. காலனி, ஆர்.டி.ஓ. சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு மைதானத்திலேயே நிறைவடைந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 70,000 வரையிலான பரிசுப் பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



