நீலகிரி: முதுமலையிலிருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்கும் வகையில், தொரப்பள்ளி அருகே வனத்தை ஒட்டி அமைக்கப்பட்ட அகழியை வனத்துறை ஊழியர்கள் சீரமைத்தனர்.

முதுமலை புலிகள் காப்பகம் வன எல்லையை ஒட்டி, கூடலுார் தொரப்பள்ளி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க வனத்தை ஒட்டி அகழி அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் காட்டு யானைகள் அகழி வழியாக இரவில் ஊருக்குள் வந்து, விவசாயப் பயிர்கள் மற்றும் வீடுகளைச் சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த மாதம் ஊருக்குள் புகுந்து காட்டு யானை விரட்டியதில் இரு மாணவியர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதைத் தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க 37 வன ஊழியர்கள், இரண்டு துப்பாக்கிகளுடன் ஏழு குழுக்களாக பிரிந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அகழியை பொக்லைன் மூலம் சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், "அகழியை சீரமைப்பதன் மூலம் தொரப்பள்ளிக்குள் யானைகள் வருவது தடுக்கப்படும். எனினும், முன்னெச்சரிக்கையாக அகழியை ஒட்டி விரைவில் மின்வேலி அமைக்கப்படும்" என்றனர்