வீட்டு உதவியாளர்கள், துணிகளை துவைப்பவர்கள் மற்றும் பாத்திரங்களை சுத்தப்படுத்துபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.37-க்கு குறைவாக ஊதியம் கொடுப்பது சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வீட்டு உதவி செய்யும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.37 இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு செவிலியர்கள், சமையலர்கள் மற்றும் தோட்டக்காரர்களுக்கு ஒரு மணி நேர ஊதியமாக குறைந்தது ரூ.38 இருக்க வேண்டும் எந்ரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, எட்டு மணி நேர பணிக்கு, வீட்டு பணியாளர்களுக்கு ரூ. 6,836 மாத ஊதியமாகவும், வீட்டு செவிலியர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் சமையலர்களுக்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது ரூ.8,051 என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறையின் துணை ஆணையாளர் (கோவை) கொடுத்த பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.