கோவை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் விடுதி காப்பாளர் புனிதா இரண்டு நாட்கள் போலீஸ் காவல் முடிந்து இன்று சிறையிலடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் விடுதி காப்பாளர் புனிதா இரண்டு நாட்கள் போலீஸ் காவல் முடிந்து இன்று சிறையிலடைக்கப்பட்டார்.
பீளமேடு பகுதியில் தர்ஷனா என்ற பெண்கள் விடுதி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகளை விடுதியின் உரிமையாளர் ஜெகநாதனுடன் உல்லாசமாக இருப்பதற்கு வார்டன் புனிதா அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறினர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விடுதி காப்பாளர் புனிதா மற்றும் உரிமையாளர் ஜெகநாதன் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். புனிதாவை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில், விடுதி வார்டன் புனிதா கடந்த 1-ம் தேதி கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை வரும் 14-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நீதிபதி கண்ணன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், புனிதா-விடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி கண்ணன், பெண் வார்டன் புனிதாவை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இந்த சூழலில், ஒரே நாளில் விசாரணை முடிவடைந்ததாகக் கூறி, புனிதா கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டார்.