பத்து ரூபாய் நோட்டுகள் வேண்டாம் : கொள்ளையடிக்க வந்த இடத்தில் கொள்கையை காட்டிச்சென்ற கொள்ளையர்கள்

திருப்பூர்: திருப்பூரில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை மட்டும் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை மட்டும் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

பாண்டியன்நகர் பகுதியில் உள்ள திருநகர் 2-வது வீதியில் வசித்து வருபவர் ஜெகநாதன் (33). கடந்த நான்கு வருடங்களாக அந்த பகுதியில் வசித்து வருகிறார்.



ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியூரில் உள்ள கோவில் ஒன்றுக்கு குடும்பத்துடன் சென்றார் ஜெகநாதன். இன்று அதிகாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.



மேலும், உள்ளே சென்று பார்த்த போது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 33 பவுன் நகை மற்றும் ரூ.50000 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை மட்டும் அலமாரியில் அப்படியே விட்டுச் சென்றதும் தெரியவந்தது.



இது தொடர்பாக, அனுப்பர்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும், கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...