மத்திய அரசுக்கு எதிரான நீதிப் போராட்டத்தில் நீதித்துறைக்கு கிடைத்தது வெற்றி : உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகிறார் கே.எம். ஜோசப்

கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கே.எம். ஜோசப் நியமிக்கப்படவிருக்கிறார்.


கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கே.எம். ஜோசப் நியமிக்கப்படவிருக்கிறார். 

 

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறையால் மேலும் இருவரை நியமிக்க கொலிஜியம் முடிவு செய்து, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரைக் கடந்த ஜனவரி 10-ம் தேதி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதன் பின்னர் இந்து மல்கோத்ராவின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, கே.எம் ஜோசப்பின் பரிந்துரையை மட்டும் பல்வேறு காரணங்கள் காட்டி தொடர்ந்து நிராகரித்து வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், நீதித் துறைக்கும் பெரும் மனக்கசப்பு ஏற்பட்டது. நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாக பல மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டினர். 

தொடர்ந்து இரண்டு முறை கே.எம்., ஜோசப்பின் பெயரை மத்திய அரசு நிராகரித்து வந்தது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஜோசப் மீதான பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டு அவருக்குப் பதவி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது. அவருடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் ஆகியோரது பரிந்துரைகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கே.எம் ஜோசப்பின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...