கோவை: இண்டிகோ விமான சேவை தனது 11-ம் ஆண்டை நிறைவு செய்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை விமான நிலையத்தில் பல்வேறு தனியார் விமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை விமான நிலையத்திற்கு தினமும் சுமார் 35 விமானங்கள் வந்து செல்கின்றன.
தற்போது கோவை விமான நிலையம் சர்வதேச தரத்தில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமானம், பயணிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளாக சேவையை நிறைவு செய்து 12-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் அதன் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடியும், ஆடிப் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து அதன் ஊழியர் ஒருவர் கூறுகையில், "இந்த கொண்டாட்டங்கள் திடீரென அறிவிப்பின்றி நடத்தப்பட்டது. இது ஆச்சரியமான ஒன்றாகவும், மகிழ்ச்சிகரமான நிமிடங்களாகவும் ஊழியர்களுக்கு அமைந்துள்ளது." என்றார்.