மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள்

கோவை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து இன்று தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

கோவை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து இன்று தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். 



தெற்கு ரயில்வே, மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் மற்றும் ஸ்ரீ ராமகிரஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 



இதில், 120-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 'நமது மேட்டுப்பாளையம்' அமைப்பின் சமூக ஆர்வலர்கள், சச்சிதானந்தா பள்ளியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் வனவிலங்கு மீட்பு குழுவைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். 



மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சரளாதன் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு துய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரயில்நிலையத்தின் வலதுபுறத்தில் இருந்த காய்ந்த மற்றும் அடர்ந்த புதர்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். 



முன்னதாக, தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு வளாகங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம் பற்றி விளக்கப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...