நீலகிரியில் முடங்க இருந்த அரசுப் பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியர்கள்

நீலகிரி: ஆங்கில கல்வியின் மோகத்தால் பல அரசுப் பள்ளிகள் மூடு விழா கண்ட நிலையில், அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தின் விடா முயற்சியால் நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று மீண்டெழுந்துள்ளது.


நீலகிரி: ஆங்கில கல்வியின் மோகத்தால் பல அரசுப் பள்ளிகள் மூடு விழா கண்ட நிலையில், அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தின் விடா முயற்சியால் நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று மீண்டெழுந்துள்ளது.



தங்களது பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி கற்பிப்பதே சிறந்தது என்று கருதும் பெரும்பாலான பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. 

எட்டு மாணவர்கள்

உதகையை அடுத்த இடுஹட்டி அரசு  ஊராட்சி ஒன்றிய நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 8 மாணவர்கள் பயின்று வந்த நிலையில் சித்ரா என்பவர் புதிதாக பள்ளிக்குத் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார்.

இவர், அந்த பள்ளியின் அருகில் உள்ள கிராமங்களில், அனைத்து வீடுகளுக்கும் சென்று தனியார் பள்ளியை போல் ஆங்கில கல்வி முறையில் அனைத்து மொழி பாடங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த முயற்சியால் 8 மாணவர்களாக இருந்த பள்ளியில் தற்போது 97 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.



மேலும், பள்ளிகளில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலும் வகையில் லயன்ஸ் கிளப் அரிமா சங்கத்தின் செயலாளர் மணிவண்ணன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் புதிதாக இருக்கைகள் மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளனர்.



இதுகுறித்து தலைமை ஆசிரியர் சித்ரா கூறியதாவது:- 

உதவி ஆசிரியை சுந்தரியும், நானும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பெற்றோர்களிடையே தனியார் பள்ளிக்கு இணையாக ஆங்கில கல்வி முறையில் தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் என உறுதியளித்தோம்.



அதன், பேரிலும் அரசுப் பள்ளி மூடு விழா காண கூடாது என்பதின் எங்களது நோக்கங்களைப் புரிந்து கொண்டும், எங்களது முயற்சியை மேலும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் லயன்ஸ் கிளப் அரிமா சங்கம் சார்பில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலும் வகையில் புதிய இருக்கைகள், மாணவர்கள் விளையாடும் வகையில் புதிய விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை இந்த பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.



மேலும், இக்கிராம மக்கள் பள்ளி மாணவர்களின் மதிய உணவை வரும் இரண்டு மாதங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தோம். மாணவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், எங்களது ஊதியத்திலிருந்து 4 ஆசிரியர்களை நியமனம் செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளில் பயின்று, மீண்டும் இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் கூறுகையில், "தனியார் பள்ளியில் பயின்ற அதே ஆங்கில கல்வி இந்த அரசுப் பள்ளியிலும் கற்பிப்பதால் நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளோம். தனியார் பள்ளிக்கு இணையாக இங்கு கல்வி கற்பிக்கப்படுவதாகப் பெருமிதம் கொள்கிறோம்." என்றனர்.



தலைமையாசிரியரின் விடா முயற்சியால் மூடும் விழாவை எதிர்பார்த்து இருந்த இந்த அரசுப் பள்ளி மீண்டும் புத்துணர்வு பெற்றது இக்கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே போல் மாவட்டத்தில் பின்தங்கி உள்ள அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...