கோவை: மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியைக் கடித்த பசு, வாயில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிறுமுகை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட மலை அடிவார கிராம பகுதிகளில் அண்மைக்காலமாக அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
இந்த கிராமங்களுக்கு வரும் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட, வேட்டைக் கும்பல்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மலை அடிவாரம் மற்றும் வனப்பகுதிகளில் வேட்டையாடிய கும்பல், தற்போது விவசாய பூமிகளிலும் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது.
நாட்டு மருந்துகள் மூலம் கண்ணாடி துகள்களைப் பயன்படுத்தி உருண்டை வடிவில் இதனை தயார் செய்து பன்றிகளுக்கு மாட்டு கொழுப்பு கலந்தும், மான்களுக்குப் பச்சை புற்களிலும் கலந்து விளைநிலங்களில் வீசி விட்டு செல்கின்றனர். இது வனவிலங்குளுக்கு மட்டுமின்றி மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்குப் பாதிப்பை ஏறபடுத்திகின்றன.
இந்நிலையில், காரமடை சீளியூர் அருகே ரமேஷ் என்ற விவசாயி தனது கால்நடையை இன்று மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, அதில் ஒரு பசு மட்டும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியைக் கடித்துள்ளது.
இதனால், பசுவின் வாய் வெடித்து சிதறியது. இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மாட்டின் வாய் மற்றும் நாக்கு பகுதி துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து காரமடை வனத்துறை மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இந்தப் பகுதிகளில் யானை, பன்றி, மான் மற்றும் கால்நடைகள் இதுபோன்ற வெடிகளில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாகி உள்ளது. எனவே, இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.