நீலகிரியில் விதிகளை மீறி காட்டேஜ் நடத்துபவர்கள் 31-ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்கக் கெடு

நீலகிரி: நீலகிரியில் விதிகளை மீறி காட்டேஜ்களை நடத்தி வருபவர்கள் இந்த மாதம் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி: நீலகிரியில் விதிகளை மீறி காட்டேஜ்களை நடத்தி வருபவர்கள் இந்த மாதம் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:- நீலகிரியில் அதிகமான கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், பலர் வீட்டுமனை குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி பெற்று, அதனை காட்டேஜ்களாகப் பயன்படுத்தி வருவது களஆய்வின் போது தெரியவந்துள்ளது. 

இதனை முறைப்படுத்த வீட்டுமனை குடியிருப்பு அனுமதி பெற்று காட்டேஜ் நடத்தும் அனைத்து உரிமையாளர்களும், வரும் 31-ம் தேதிக்குள் வீட்டுமனை குடியிருப்பு கட்டடங்களை, காட்டேஜ்களாக பயன்படுத்துவதற்கான திருத்திய திட்டத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு, சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், அனுமதியில்லா காட்டேஜ்களுக்கு செப்., 1 முதல் 'சீல்' வைக்கப்படும், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...