கணுவாயில் முகமூடி அணிந்து மளிகைக் கடையில் மர்மநபர் திருட்டு: சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை

கோவை: கணுவாயில் உள்ள மளிகைக் கடையில் ஒன்றில் முகமூடி அணிந்து வந்து திருடிய கொள்ளையனை, சி.சி.டி.வி., காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கணுவாயில் உள்ள மளிகைக் கடையில் ஒன்றில் முகமூடி அணிந்து வந்து திருடிய கொள்ளையனை, சி.சி.டி.வி., காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். 

கணுவாய் வி.எம்.டி., நகரில் திருநேல்வேலியைச் சேர்ந்த தங்கராஜா என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடை உள்ளது. ஓராண்டாக இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தக் கடையில், நேற்றிரவு இரண்டு மணிக்கு மேற்கூரையை உடைத்து இறங்கிய திருடன் கள்ளாபெட்டியில் இருந்த ரூ.25,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளான்.



மேற்கூரையில் இருந்து இரும்பு செயினின் உதவியால் உள்ளே புகுந்த திருடன், முகத்தை மூடிக்கொண்டு தலைக்கு தொப்பி அணிந்து அடையாளம் தெரியாத வண்ணம் சென்று கொள்ளையடித்தது, அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்தது. 



இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம் போல கடை திறக்க வந்த உரிமையாளர் தங்கராஜா, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு ரொக்கம் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது தொடர்பாக வடவள்ளி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...