கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்துவிட்டு பேரூர் படித்துறையில் வீசியெறிந்த குப்பைகளை தன்னார்வலர்கள் அகற்றினர்.

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பேரூர் படித்துறை வழியே பாயும் நொய்யல் ஆற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், அவர்களை வணங்கவும் திரண்டனர்.
இதன் காரணமாக ஆற்றில் சுமார் 2 டன் அளவுள்ள
பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்பட்டது.

இந்த சூழலில், குப்பைகளை அகற்றும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் களமிறங்கினர்.
முன்னதாக, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை நீர்நிலைகளில் போடவேண்டாம் எனவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எடுத்துரைத்தனர்.

தன்னார்வலர்களின் இந்த தன்னலமற்ற சேவையால், ஆண்டுதோறும் இத்தினத்தில் மாசுபடும் நொய்யலும், பேரூர் படித்துறையும் பொலிவு பெற்றது.