திருப்பூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை முயற்சி : போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



அங்கேரிபாளையம் பகுதியில் ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு வந்த மர்மநபர் ஒருவர் நீண்ட நேரமாக சந்தேகப்படும் வகையில் ஏ.டி.எம்., இயந்திரத்தை இயக்கிப் பார்த்துள்ளார். இதன் காரணமாக ஏ.டி.எம்., இயந்திரத்தின் ஆபத்து சமிக்ஞை மும்பையிலுள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளது. எச்சரிக்கையான வங்கி ஊழியர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள்ளாகவே அந்த மர்மநபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். விசாரணையில் ஏ.டி.எம்., இயந்திரம் ஏற்கனவே பழுதானதும், அதில் பணம் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...