திருப்பூர் : உடுமலை அருகே திரிமூர்த்தி மலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது
திருப்பூர்: உடுமலை அருகே திரிமூர்த்தி மலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

உடுமலை அருகே திரிமூர்த்தி மலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதற்கு கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செய்திமக்கள் தொடர்பு துறை, வருவாய்துறை, போக்குவரத்துத்துறை, கால்நடைதுறை, பள்ளிக்கல்வி துறை, வேளாண்துறை, உள்ளாட்சிதுறை, சுகாதாரதுறை, மருத்துவதுறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட அரசின் 20 துறைகள் சார்பில் பல்துறை விளக்கக் கண்காட்சி கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதேபோல, நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சிலம்பாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், நாட்டுப்புறப்பாட்டு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஒவியப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டிகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் நினைவுப் பரிசுகளை வழங்கினார். பின்னர், தமிழக அரசின் சார்பில் ரூ. 26,20,200 செலவில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா, விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் உள்ளிட்டவை 239 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
