கோவை : வீட்டில் இருந்தவாறே மருத்துவர் இல்லாமல் சிகிச்சை முறைகளை செய்யக் கூடாது என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பதற்கு, இலவச பயிற்சி வழங்கப்படுவதாக விளம்பரம் அளித்த நிஷ்டை மையத்தின் தலைவர் ஹுலர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இதுபோன்ற மருத்துவர் இல்லாத சிகிச்சைகளை பொதுமக்கள் ஒருபோதும் செய்யக் கூடாது என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் பேஸ்புக் மூலமாக, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது :- வீட்டிலேயே சிகிச்சை பெறுவது, சமூக வலைதளம் மூலம் காட்சிகளைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்று தவறான வழிகளில் வழிநடத்துவோர்கள் மீதும் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். மேலும், தற்போது நவீன மருத்துவ வசதிகள் இருந்தும் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. எனவே பொதுமக்கள், மாணவர்களின் பங்கு இதுபோன்ற சமயங்களில் நிச்சயம் வேண்டும், இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.