மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பெண் வார்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் விடுதி காப்பாளர் புனிதா-வை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி கண்ணன் அனுமதி வழங்கியுள்ளார்.

கோவை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் விடுதி காப்பாளர் புனிதா-வை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி கண்ணன் அனுமதி வழங்கியுள்ளார்.

பீளமேடு பகுதியில் தர்ஷனா என்ற பெண்கள் விடுதி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகளை விடுதியின் உரிமையாளர் ஜெகநாதனுடன் உல்லாசமாக இருப்பதற்கு வார்டன் புனிதா அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறினர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விடுதி காப்பாளர் புனிதா மற்றும் உரிமையாளர் ஜெகநாதன் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். புனிதாவை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில், விடுதி வார்டன் புனிதா கடந்த 1-ம் தேதி கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை வரும் 14-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நீதிபதி கண்ணன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், புனிதா-விடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கண்ணன், பெண் வார்டன் புனிதாவை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...