சுந்தராபுரம் விபத்து வழக்கு : முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளால் அதிகரிக்கும் குழப்பம்

கோவை: 6 பேரை பலி கொண்ட சுந்தராபுரம் விபத்து தொடர்பான வழக்கில் காவல்துறை மற்றும் தடயவியல் அறிக்கைகளில் இருக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



கோவை: 6 பேரை பலி கொண்ட சுந்தராபுரம் விபத்து தொடர்பான வழக்கில் காவல்துறை மற்றும் தடயவியல் அறிக்கைகளில் இருக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

கோவை - பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அருகே நேற்று ரத்தினம் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான சொகுசு கார் கோவையை நோக்கி அதிவேகமாக வந்தது. இந்த கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இந்தக் கோர விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்தக் காரின் ஓட்டுநர் ஜெகதீஸ் குமார் மீது ஏற்கனவே 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி., என்ற 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 185 என்பது மது அருந்தி அல்லது போதையினால் வாகனத்தை இயக்கியது என்ற பிரிவாகும். எனவே, சுந்தராபுரத்தில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததினாலே ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, ஓட்டுநர் ஜெகதீஸ் குமாரின் ரத்த மாதிரிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட தடயவியல்அறிக்கையில், அவர் மது அருந்தவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுந்தராபுரத்தில் நிகழ்ந்த ஒரே விபத்து சம்பவம் தொடர்பான வழக்கில் காவல்துறையின் அறிக்கையும் மற்றும் தடயவியல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...