நீலகிரி: நீலகிரி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டம், கூட்டமாகக் காட்டு மாடுகள் உலா வரும் தேயிலை தோட்ட விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் காட்டு மாடு, யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை விரட்டப் போகும் மனிதர்களை அவை தாக்குவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக தேயிலை தோட்டங்கள், விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. அவ்வாறு வரும் காட்டு மாடுகள் மனிதர்களையும் தாக்கி வருகிறது.

இதில், உச்சகட்டமாக மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், உதகையை அடுத்த அகலார் கிராம சுற்றுப்புறங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் உலா வந்தன. இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து தேயிலை பறிக்கச் செல்லவில்லை. மேலும், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கினர்.