கோவை: சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் அக்னி மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து, மேட்டுப்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லுார், உக்கடம் பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்ட தனி அறையை ஏற்படுத்தியுள்ளன.
கோவை: சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் அக்னி மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து, மேட்டுப்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லுார், உக்கடம் பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்ட தனி அறையை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக வெளியாகிய செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரே நேரத்தில் நான்கு தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கு பாலுாட்ட, வசதியாக அமர சொகுசான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாட பொம்மைகள், வெளிச்சம் தர விளக்குகள், பேன் போன்றவைகளும் இங்கு உள்ளன.

குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைகளின் எளிதான செரிமானத்துக்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவும் என்பதை பெரும்பாலான தாய்மார்கள் அறிந்திருக்கவில்லை. பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.
பெண்கள் மட்டுமன்றி, ஒவ்வொரு ஆண்களும் தாய்ப்பால் புகட்டுவதின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும். எங்களது முயற்சிக்கு வீ-லிட்டில் மற்றும் கோயம்புத்துார் பேரன்ட்டிங் நெட்வொர்க் குழுவும் உதவுகிறது. இதன் தொடக்க விழா, சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர காவல்துறை, சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் லட்சுமி தொடங்கி வைத்தார். கங்கா மருத்துவமனை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மைய டாக்டர்.சுமா நடராஜன், பயிற்சி உதவி கலெக்டர் ஸ்நேகா, மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் தாளாளர் ரோட்டரியன் லீமா மார்ட்டின் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.