பல்லடம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே இடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). அருள்புரம் பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 31-ம் தேதி மாலை ஆறு மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் அருள்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருவர் அவரை காரில் கடத்தியதோடு, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

இதையடுத்து மணிகண்டன் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் சூழந்து காரை சிறைபிடித்தனர். இதனால் பயந்து போன கொள்ளையர்கள் இருவரும் தப்பியோடினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை பூமலூர் பிரிவு அருகே போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுல்தான்பேட்டையை சேர்ந்த அறிவழகன் மகன் பிரவீன்குமார்(20), இடுவாய் பகுதியை சுந்தர் மகன் அருண்குமார்(25), கருப்பையா மகன் வினோத்குமார்(24), திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் மகன் நித்தியானந்தம்(29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நரி என்கிற மணிகண்டன்(28) ஆகியோர் இணைந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காரில் மணிகண்டனை கடத்தி பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்களை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...