அடுத்த தலைமுறைக்கான கும்கி யானைகளை உருவாக்கும் வனத்துறை : முதுமலையில் பயிற்சி பெறும் குட்டி யானைகள்

நீலகிரி: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் அடுத்த தலைமுறை கும்கி யானைகளை உருவாக்கும் பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். முகாமில் உள்ள நான்கு குட்டி யானைகளோடு இணைந்து கேரளாவை சேர்ந்த மூன்று கும்கி யானைகள் மூன்று மாத பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

நீலகிரி: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் அடுத்த தலைமுறை கும்கி யானைகளை உருவாக்கும் பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். முகாமில் உள்ள நான்கு குட்டி யானைகளோடு இணைந்து கேரளாவை சேர்ந்த மூன்று கும்கி யானைகள் மூன்று மாத பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

நாளுக்கு நாள் உணவு உள்ளிட்ட தேவைகளை தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் அடிக்கடி யானை-மனித மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் தாக்கி அப்பாவி மக்கள் உயிர் இழப்பதும், அதேநேரம் மின்வேலி, பன்றி வெடிகளைக் கொண்டு யானைகளை மனிதர்கள் கொல்வதும் அதிகரித்து வருகிறது.

மோதல்கள்







வனங்கள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருவதால், வரும் காலங்களில் தற்போது இருப்பதை விட மோதல்கள் பல மடங்கு அதிகரிக்க வைப்பு இருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடக, அஸ்ஸாம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் யானை-மனித மோதல்கள் வரும் காலங்களில் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களைத் தடுக்க கும்கி யானைகளின் தேவைகள் அதிகமாக உள்ளது. அதனால் புதிதாக கும்கி யானைகளை தயார் செய்வது அத்தியாவசியமானதாக உள்ளது. காரணம் கும்கி யானைகள் இருந்தால் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்குச் சென்று யானைகளை விரட்ட முடியும். மேலும், கும்கி யானைகள் இருந்தால் வனத்துறை பணியாளர்கள் பாதுகாப்பாக காட்டு யானைகள் அருகே சென்று வேலை செய்ய முடியும்.

கும்கி யானை







தமிழகம், கேரளா கர்நாடக மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஏற்படக்கூடிய யானை-மனித மோதல்களைத் தடுப்பதில் முக்கிய பங்கை வகிப்பவை முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள கும்கி யானைகள். குறிப்பாக முதுமலையில் பராமரிக்கப்பட்ட சுப்பிரமணி, இந்தர் ஆகிய கும்கி யானைகள் புகழ் பெற்றவை.

இந்த யானைகள் நான்கு மாநிலங்களில் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பலமுறை சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணி யானை இறந்த நிலையில், இந்தர் யானை கண் பார்வையை இழந்து ஓய்வு பெற்றது.

தற்போதைய தலைமுறை கும்கி யானைகளாக தெப்பக்காடு யானைகள் முகாமில் இருப்பவை முதுமலை, விஜய், வசீம் ஆகிய யானைகள் தான். இந்த யானைகள் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று யானைகளை விரட்டவும், பிடிக்கவும் உதவியுள்ளன.

இந்த யானைகளுக்கும் தற்போது வயதாகி வருவதால், இன்னும் சில வருடங்களில் அவையும் ஓய்வு பெரும் நிலையில் தான் உள்ளன. எனவே அடுத்த தலைமுறை கும்கி யானைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். 

அடுத்த தலைமுறை

முதற்கட்டமாக முதுமலையில் பராமரிக்கப்படும் பொம்மன், கிருஷ்ணா, ஸ்ரீநிவாசன் மற்றும் சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட கிரி ஆகிய குட்டி யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளோடு சேர்ந்து கேரளாவில் இருந்து முதுமலைக்கு பயிற்சி பெற வந்த மூன்று யானைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது முதுமலையில் பயிற்சி பெற்று வரும் 7 யானைகளுக்கும் சிறந்த பயிற்சியாளர்களால், சிறப்பான முறையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானைகளை பிடிக்கவும், லாரியில் ஏற்றவும், பிடிக்கப்படும் காட்டு யானையின் காலில் சங்கிலி கட்ட உதவவும், காட்டு யானைகள் காலில் கட்டப்படும் சங்கிலியை மிதிக்கவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக முதுமலையைச் சேர்ந்த நான்கு குட்டி யானைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் முழு பயிற்சியையும் பெற்று, அடுத்த தலைமுறையின் சிறந்த கும்கி யானைகளாக வரும் என்கிறனர், அவற்றுக்கு பயிற்சி அளித்து வரும் யானை பாகன்கள். 

கேரள யானைகள்







கேரளாவில் இருந்து கும்கி பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள மூன்று யானைகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், முதுமலையில் கும்கி பயிற்சி பெற்று வரும் மூன்று கேரளா யானைகளுக்கு, சுற்றுலாப் பயணிகளை சவாரி அழைத்துச் செல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுவரை பாகன்களை மட்டுமே தன் மீது அமர அனுமதித்த கேரளா யானைகள், முதன் முறையாக மற்றவர்களையும் ஏற்றி வலம் வந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக அந்த யானைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. யானைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த சூரியன் என்கின்ற யானை தன்னை பராமரித்து வந்த பாகனை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாக்கி கொன்றது.

அதிலிருந்து அந்த யானையை கட்டியே வைத்திருந்தனர். அந்த யானையிடம் யாரும் நெருங்க முடியாத நிலை இருந்தது. மிகவும் கொடூரமான குணத்தோடு முதுமலையில் பயிற்சிக்காக அழைத்து வரப்பட்ட அந்த யானைக்கு தற்போது தனது பாகனை தன் மீது அமர அனுமதிக்கிறது. மேலும் பாகன்களின் கட்டளைகளுக்கு கட்டுப்படுகின்றது.

முதுமலை யானை பான்களும், கேரளா யானைகளுடன் நெருங்கிப் பழகி வருகின்றனர். கூடிய விரைவில் இரு மாநிலங்களுக்கும் அடுத்த தலைமுறைக்கான கும்கிகள் 'ரெடி' ஆகிவிடும் என்கிறது தமிழக வனத்துறை. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...