கோவையில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள்; 7 பவுன் தங்க நகை கொள்ளை

கோவை: கோவையில் இரவில் வீடு புகுந்து முக மூடி கொள்ளையர்கள் பெண்களைத் தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் இரவில் வீடு புகுந்து முக மூடி கொள்ளையர்கள் பெண்களைத் தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் முரளி என்பவரது வீட்டில் நேற்று இரவில் புகுந்த கொள்ளையர்கள், மனைவி பிரியலதா, மகள் ராகவி, அம்மா தங்கம்மா ஆகியோரைத் தாக்கி 7 பவுன் நகையைப் பறித்து சென்று விட்டனர். இதில் ராகவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார், அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் கடந்த மாதம் கோவை அடுத்த சூலூரில் தொடர் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து தற்போது புதிதாக வந்துள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான பாண்டியராஜன் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் தொடர்ந்து கோவையில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். 



மேலும், கோவை புறநகர் பகுதிகளில் அதிகமாக குற்றம் நடக்கும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியில் வாகன தணிக்கை மற்றும் கேமராக்கள் அமைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...