பிளாஸ்டிக் கழிவு குடோனில் தீ விபத்து; துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்

கோவை: கோவை சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் உள்ள கழிவு பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர்.

கோவை: கோவை சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் உள்ள கழிவு பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர்.



சுந்தராபுரம்- மதுக்கரை சாலையில்  கிஷன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது ஓல்டு பிளாஸ்டிக் நிறுவனம். இது கோவை ரத்தினம் பப்ளிக் பள்ளிக்கு அருகில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ சிறிது நேரத்தில் வேகமாகப் பரவியது. பின்னர் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் அந்த தீயை அணைக்க முற்பட்டதுடன்  தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். 



இதுகுறித்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வேகமாகப் பரவிய தீயை சுமார் இரண்டு மணி நேரத்தில் அணைத்தனர். இதில் எரிந்து போன கழிவு பிளாஸ்டிக்கின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...