கோவை: எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை முதல் சேலம் வரை எட்டுவழிச்சாலை அமைக்கும் வேலையைத் தமிழக அரசு ஈடுபட்டுள்ள நிலையில், எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைபயணம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த நடைபயணத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்தது. இதனைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.இராமமுர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எட்டுவழிச்சாலையா எடப்பாடிக்கு சாலையா, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது, கைது செய்தவர்களை விடுதலை செய், என முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக கோவை பீளமேடு பகுதியில் இருந்து ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் கட்சி கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.