கோவை : திருமணமானவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் தெற்காசிய அழகிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த ரிதிஷா நிவேதா முடிசூடிக் கொண்டார்.

கோவையில் பிரபலமான தனியார் நிறுவனங்களில் தொழிலதிபர் தேவிகா ரமேஷ் என்பவரின் ஆர்.எம்.பி., குழுமம் ஒன்று. இவரது மகள் உள்கட்டமைப்பு டிசைனர் ரிதிஷா நிவேதா. சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட இவரை, தேசிய இயக்குநர் ரேஷ்மா ஸ்ரீஜயின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகளின் தெற்காசிய உலக அழகிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான திருமணமான பெண்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கோவையைச் சேர்ந்த ரிதிஷா நிவேதா தெற்காசிய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதோடு, மிஸஸ் ஐக்கிய நாடுகள் அம்பாசிட்டர் பட்டத்தையும் அவர் கைப்பற்றினார்.
தெற்காசிய அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட நிவேதா, பெண்கள் அதிகாரம், தொழில்முனைவோர் ஊக்குவித்தல் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.