தவறவிட்ட பர்சை மீட்டு உரியவரிடம் சேர்த்த காவலர்

கோவை: கோவையில் பயணி ஒருவர் தவறவிட்ட பர்சை மீட்டு உரியவரிடம் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் பயணி ஒருவர் தவறவிட்ட பர்சை மீட்டு உரியவரிடம் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை மாநகர காவல்துறையில் போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிபவர் மகேஷ் என்ற ராக்கி மகேஷ்.

வழக்கம் போல இவர் குப்புசாமி நாயுடு மருத்துவமனை சிக்னல் அருகே போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு ஒது பர்ஸ் கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனுள் சில ஏ.டி.எம் கார்டுகள், பான் கார்டு மற்றும் அசல் ஓட்டுனர் உரிமம் போன்றவை இருந்தன.

அதனை எடுத்த ராக்கி மகேஷ் ஓட்டுனர் உரிமத்தில் இருந்த முகவரியை பார்த்தபோது அது சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், அந்த நபரின் வீட்டிற்குச் சென்ற ராக்கி மகேஷ்-ன் நண்பர், பர்ஸ் போலீசாரிடம் இருப்பதை தெரிவித்தார்.

பின்னர், அந்த பர்சுக்கு உரியவர் அவினாசி சாலையில் பணியில் இருந்த ராக்கி மகேசிடம் சென்று அவருடைய பர்சை திரும்பப்பெற்றார்.

சாலையில் கேட்பாரற்று கிடந்த பர்சை உரியவரிடம் மீட்டுக் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...