கைத்தறிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியினை மத்திய அரசு நிச்சயம் குறைக்கும் : கோவையில் அமைச்சர் ஒ.எஸ்., மணியன் நம்பிக்கை

கோவை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு விரைவில் குறைக்கும் என கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு விரைவில் குறைக்கும் என கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- வரும் பிப்ரவரி மாதம் கோவை கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தமிழக மக்களிடம் வாங்கும் திறன் குறைந்திருப்பது என பொதுவாக சொல்வது சரியானது அல்ல. உற்பத்தியைப் போல நுகர்வோரும் மிகுதியாக இருப்பதால் ஜி.எஸ்.டி., யினால் தமிழகத்திற்கு குறைபாடு இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம்.

மேலும், ஜி.எஸ்.டி., வரிகளைக் குறைக்க வேண்டுமென்பதை ஓங்கி ஒலிக்கிற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று சிலவற்றிற்கு ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கைத்தறிக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கை விரைவில் நிறைவேறும். கைத்தறி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ஜவுளித்துறை படிப்பு ஆராய்ச்சிகளுக்கு மானியம் மற்றும் உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காலதாமதம் ஏற்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...