நீலகிரி: உதகையில் இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவனத்தில் 'வனப்பகுதிகளில் நீர்ப்பிடி முகடுப்பகுதி மேலாண்மை' குறித்த 12 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று துவங்கியது.

கருத்தரங்கில் மையத்தின் தலைவர் முனைவர் ஓம் பால் சிங் கோலா பேசும் போது, "மனித வாழக்கையில் மிக முக்கியமான நீர் மற்றும் காற்று ஆகியவை எந்தவொரு இடையூறும் இன்றி அனைவருக்கும் கிடைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் சமீப காலமாக காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த இரு இயற்கை வளங்களுமே மாசடைந்துள்ளன.
இவ்விரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், குறையில்லாமல் அனைவருக்கும் கிடைக்கவும் வனங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். இப்பயிற்சியில் கற்றுக்கொள்ளும் எல்லா தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி வனங்களை பாதுகாக்க வேண்டும்" என்றார்.
குன்னூர் டான்டீ மேலாண்மை இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசுகையில், "நீர்ப்பிடி முகடுப் பகுதி மேலாண்மையில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க அமைக்கப்படும் கட்டமைப்புகள் மிகவும் செலவு குறைந்தவையாகவும், சரியான இடத்தில் கட்டப்பட்டு அதன் மூலம் முழுமையான பயனளிப்பவையாகவும் இருக்க வேண்டும்.
அது போன்ற கட்டமைப்புகளை கட்டும் போது அந்த பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை, இட அமைப்பு மற்றும் நீரியல் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் அனைத்து நதிகளுமே வனங்களிலிருந்தே உருவாகின்றன.
எனவே தூய்மையான நீரைப் பெற வேண்டுமாயின் வனங்களில் நீர் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குதல் மிக அவசியம். அதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமையும்." என்றார்.
இப்பயிற்சியில் ஒரிசா, குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், கோவா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 41 வனச்சரகா்கள் பங்கேற்றுள்ளனர்.