திருப்பூர்: உடுமலை அருகே கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது
திருப்பூர்: உடுமலை அருகே கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி முதலைப் பண்ணை முதல் கல்லாபுரம் வரை செல்லும் சாலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது.
பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த சாலை பழுதடைந்தது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கியது. ஆனால், சாலை அமைக்க அமராவதி வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அந்த சாலை புலிகள் காப்பகத்திற்குள் வருவதால், சாலை மேம்பாட்டு பணிகள் செய்ய மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வாகனங்கள் இயக்க அனுமதிக்க முடியாது எனவும் சாலை அமைக்க விடாமல் நிறுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் வனத்துறையை எதிர்த்து ஆா்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வந்த சாலை என்பதால் சாலையை புதுப்பிக்க அனுமதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை முதல் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.