கோவை : மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மற்றும் கூடலூர் வனக்கோட்டங்களுக்கு 2 வனப் பாதுகாப்புக் குழுவை நியமனம் செய்து கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழு, சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் ஊடுருவலைத் தடுத்து வந்தனர். அவர்களுக்கு, கடந்த மார்ச் முன்பு 10 பேர் அடங்கிய கோவை கோட்டத்திற்குட்பட்ட வனத்துறையினரின் அதிவிரைவுப் படையினருக்கு தமிழக அரசு ரூ. 89 லட்சம் ஒதுக்கியது. வனத்துறைக்கான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு வேட்டைத் தடுப்புக் குழு பயிற்சி அளிக்கிறது.
இந்த நிலையில், நிதிப்பற்றாக்குறையால் நடப்பு நிதியாண்டுக்கான மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு ஊதியம் நிலுவையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் வனத்துறையினருக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பிடும் போது, கோவை வனத்துறையினருக்கு வெறும் ரூ. 8,500 மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர். இதனிடையே, நிலுவையில் உள்ள தொகை வரும் ஜுன் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போதுவரை மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு எந்த வித சம்பள பாக்கியும் வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.