செல்வந்தர்களால் சுரண்டப்படும் தேயிலை தோட்டங்கள் : கட்டிட சோலையாக மாறும் நீலகிரி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தேயிலை செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போதும் இந்த தேயிலை எஸ்டேட்டுகள் தனியார் வசம் உள்ளன. துவக்கத்தில் நீலகிரி மாவட்ட மக்கள் மலை காய்கறிகளை பயிரிட்டனர். ஆனால், காலப்போக்கில் மாற்றுப் பயிராகவும், பணப்பயிராகவும் கருதப்பட்ட தேயிலைக்கு மாறினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தேயிலை செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போதும் இந்த தேயிலை எஸ்டேட்டுகள் தனியார் வசம் உள்ளன. துவக்கத்தில் நீலகிரி மாவட்ட மக்கள் மலை காய்கறிகளை பயிரிட்டனர். ஆனால், காலப்போக்கில் மாற்றுப் பயிராகவும், பணப்பயிராகவும் கருதப்பட்ட தேயிலைக்கு மாறினர்.



பெரும்பாலான பகுதிகளில் தேயிலை செடிகளை நடவு செய்தனர். மாவட்டத்தில் 60 சதவீதம் விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 1998-ம் ஆண்டு வரை தேயிலைக்கு உரிய விலை கிடைத்து வந்தது. அதிகபட்சமாக ரூ.22 கிடைத்து வந்தது. இதனால், மலை காய்கறி தோட்டங்கள் கூட தேயிலை தோட்டங்களாக மாற்றப்பட்டன. ஆனால், இந்த மகிழ்ச்சி விவசாயிகளுக்கு வெகு காலம் நீடிக்கவில்லை. கடந்த 1990-ம் ஆண்டு முதல் தேயிலை விலை வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது.

சிண்டிகேட் 

தேயிலை தூள் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் முறையை பின்பற்றி ஏலம் எடுப்பது, ரஷ்யா மற்றும் பாகிஷ்தான் போன்ற சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது முற்றிலும் நின்று போனது. அன்றை தினம் முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளின் துயர காலம் ஆரம்பித்தது.



பசுந்தேயிலை கிலோ ஒன்று ரூ.2 வரை சென்ற நிலையில், அப்போதே பலர் தோட்டங்களை விற்பனை செய்ய துவங்கினர். தற்போது பசுந்தேயிலை கிலோ ஒன்று ரூ.14 வரை விற்பனை செய்யப்பட்டாலும், தொழிலாளர்கள் கூலி, உரம் போன்ற செலவுகள் செய்த பின், விவசாயிகளுக்கோ சொற்ப பணம் மட்டுமே கிடைக்கிறது.

சில சமயங்களில் கூலிக்கே சரியாகிவிடும் நிலையில், விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே விவசாயிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.



இதனால், கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்பனை செய்ய துவங்கிவிட்டனர். தற்போது இந்த தேயிலை எஸ்டேட்டுக்களை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பணக்காரர்கள் வாங்கி சொகுசு பங்களா மற்றும் காட்டேஜ்களாக மாற்றி வருகின்றனர்.

கட்டிட சோலை

எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என காட்சியளித்த தேயிலை தோட்டம் தற்போது கட்டிட சோலையாக மாறி வருகிறது. பெரும்பாலான சிறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்கள் அனைத்தும் வெளியூர் பணக்காரர்களின் பொழுது போக்கு மற்றும் ரீலாக்ஸ் செய்யும் பங்களாக்களாக மாறிவிட்டன. தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் பிளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



சிலர் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையிலான தேயிலை தோட்டங்களை வாங்கினாலும், அவைகளை பராமரிக்காமல், சொகுசு பங்களாக்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளை அமைத்து வருகின்றனர். சிலர் மலை உச்சியில் பங்களாக்களை கட்டி, அதற்கு செல்ல சாலைகளை அமைப்பதற்காக பல ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை அழித்துவிட்டனர்.

சிலர் மலைகளையே பிளந்து அதில் சாலை அமைத்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், தற்போது சிறு விவசாயிகள் தங்களிடம் உள்ள சிறிய அளவிலான தேயிலை தோட்டங்களை விற்பனை செய்துவிட்டு வெளியூர் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதே நிலை தொடருமாயின், இன்னும் 10 ஆண்டுகளில் நீலகிரியில் தேயிலை தோட்டங்களை பார்க்க வேண்டும் என்றால், பெரும் முதலாளிகளின் தேயிலை தோட்டத்தை மட்டுமே பார்க்க முடியும். 



சிறு விவசாயிகள் தேயிலை தோட்டங்கள் வைத்திருந்தார்களா? என்று ஆச்சரியப்படும் வகையில், தேயிலை தோட்டங்கள் காணாமல் போய் கட்டிட சோலைகள் மட்டுமே காண முடியும். தற்போதே, நீலகிரி மாவட்டத்தின் காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு குறித்த சமயத்தில் பருவமழை பெய்வதில்லை.

அதேபோல், வெப்பநிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளில் நிலவும் காலநிலை நிலவ வாய்ப்புள்ளது.

இதனால், தேயிலை விவசாயிகளை தேடியே கண்டுபிடிக்க முடியும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...