கோவை: வாய் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த பெண் யானை இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் அந்த யானைக்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த 9 வயது பெண் யானை, தோலம்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்தது.
முன்னதாக பெரியநாயக்கன்பாளையம் அருகே அந்த யானைக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வனத்துறையினர் வழங்கினர். அதன் பிறகு அந்த யானை கவனிப்பின்றி வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்த சூழலில், காயம் முற்றியதால் அந்த யானை தோலம்பாளையம் அருகே பரிதாபமாக பலியானது. அந்த யானையின் உடல் விரைவில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.