'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார் ஆணையாளர்

கோவை: கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டார்.

கோவை: கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டார்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருவேங்கடசாமி சாலையில் மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 1.20 கி.மீ நீளம் மற்றும் 21 மீ அகலம் கொண்ட மாதிரி சாலை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருவேங்கடசாமி சாலை மற்றும் சர்.சண்முகம் சாலை சந்திப்பில் நவீன எந்திரம் மூலம் தார் தளம் அமைக்கும் பணியின் மாதிரி செயல் விளக்கம் இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப.காந்திமதி, மேற்கு மண்டல உதவி ஆணையர், மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.



இதைத்தொடர்ந்து, வ.உ.சி மைதானத்தில் ரூ.12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் இயற்கை மரம் போன்ற தோற்றமளிக்கும் தங்க நிறத்திலான இலைகளைக் கொண்ட 'ஸ்மார்ட் ட்ரீ' மற்றும் வைஃபை வசதி உருவாக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்.



இந்த 'ஸ்மார்ட் ட்ரீ'யில் சுமார் 30 பேர் அமரும் வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இலவச வைஃபை மற்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின் இயந்திரங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...