கோவை–பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவடையும் - திட்ட மேலாளர்

கோவை: கோவை - பொள்ளாச்சி தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் தற்போது 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தாண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும் என்றும் அச்சாலையின் திட்ட மேலாளர் உதய் சங்கர் தெரிவித்தார்.


கோவை: கோவை - பொள்ளாச்சி தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் தற்போது 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தாண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும் என்றும் அச்சாலையின் திட்ட மேலாளர் உதய் சங்கர் தெரிவித்தார்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்ல பொள்ளாச்சி சாலையை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல் கேரளா மாநிலம் செல்லவும் பொள்ளாச்சி பிரதான சாலையாக உள்ளது.

இதனிடையே பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வேலைக்குச் செல்ல பல ஆயிரம் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் பயணித்து வருகின்றனர். இதனால் கோவை-பொள்ளாச்சி சாலையானது மிகுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தது.

இதனைப் போக்க தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் கோவை ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி வரை 26.85 கிலோ மீட்டர் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. 

இந்த சாலை 36 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்த பணிக்காக ரூ.415 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, முள்ளுபாடி ஆகிய நான்கு இடங்களில் மேம்பாலங்கள் வரவுள்ளன.

இதனிடையே ஈச்சனாரியை தவிர்த்து மற்ற இடங்களில் பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.

ஈச்சனாரி விநாயகர் கோவில் கோவை மக்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த கோவிலை இடிக்காமல் பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் தொடர்ச்சியாக ஈச்சனாரி கோவிலை இடிக்காமல் பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை அனுமதி வழங்கியது.

இது குறித்து திட்ட மேலாளர் உதய் சங்கர் கூறுகையில், "ஈச்சனாரி மேம்பாலம் கட்ட ரூபாய் 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இந்த பணிகள் தொடங்கப்படும். ஈச்சனாரியில் 1 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டப்படும். கிருஷ்ணா கோவில் அருகே பாலம் தொடங்கி, ஈச்சனாரி கோவில் தாண்டு 350 மீட்டர் தூரம் அளவில் பாலம் முடிவு பெறும்.

26.85 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது 18 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடையும். கான்கிரீட் சாலை அமைப்பதால் பராமரிப்பு செலவு மிச்சமாகும்."என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...