கோவை: சுந்தராபுரம் பகுதியில் சொகுசு கார் மோதி ஆறு பேர் பலியான சம்பவத்தில், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இன்று காலை பொள்ளாச்சி சாலையில் இருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார் சுந்தராபுரம் அருகே நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நாராயணன் (70), அம்சவேணி (34), சுபாஷினி (18) என்ற கல்லூரி மாணவி, குப்பாத்தாள் (70), ஸ்ரீ ரங்கதாஸ் (69) மற்றும் வேலம்மாள் (60) ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சோமசுந்தரம் (50) என்பவரை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.