தமிழக மக்களைப் போலவே உறுதியாக இருக்கிறார் கருணாநிதி : சந்திப்புக்குப்பின் ராகுல் காந்தி பேட்டி

சென்னை: தமிழக மக்களைப் போலவே திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருக்கிறார் என்று அவரை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக மக்களைப் போலவே திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருக்கிறார் என்று அவரை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



 

உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான மு.கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சூழலில், அவரைக் காண தி.மு.க., தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மருத்துவமனைக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.



இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அவரைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "தி.மு.க., தலைவர் கருணாநிதி தமிழ் மக்களின் உணர்வாக விளங்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், அவருக்கும் இடையிலான நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. அவரைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக உள்ளார். தமிழக மக்கள் போல் அவர் மிகவும் பலமான மனம் கொண்டவர். அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி குறித்து சோனியாவும் விசாரித்ததை அவரிடம் தெரிவித்தேன்." என்றார்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...