தற்போது: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்க்கிறது கனமழை

கோவை: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கோவை: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிக அளவில் கொட்டித் தீர்த்தது.



மாநகர பகுதிகளில் தற்போது மழை அளவு குறைந்து விட்டாலும், வால்பாறை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஊரகப் பகுதிகளில் தற்போதுவரை மழை பெய்து வருகிறது. வால்பாறை தாலுக்கா அலுவலகம் பகுதியில் மட்டும் நேற்று 6 மி.மீ வரை மழை பதிவாகியிருந்தது.



பொள்ளாச்சியில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தற்போது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான, காளியாபுரம், சேத்துமடை, ஆழியாறு மற்றும் வேட்டைக்காரன் புதூர் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது.



கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. மேலும், உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீர் கரையை தாண்டி செல்கிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...