திருப்பூர்: திருப்பூரில் ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பூமிக்குத் தந்த மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுசில். இவருடைய மனைவி கோகிலா (20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோகிலா-வின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அருணா உடனிருந்தார். ஆம்புலன்ஸ் கருப்பன கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது கோகிலா-வுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.
பெண் குழந்தை
இதனைத் தொடர்ந்து, மருத்துவ உதவியாளர் அருணா, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கோகிலா-வுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். கடும் போராட்டத்திற்கு பிறகு, சுகப்பிரசவம் மூலம் கோகிலா-வுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதனைத் தொடர்ந்து, தாயையும், சேயையும் அதே ஆம்புலன்சில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பார்த்த மருத்துவ உதவியாளரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.