கோவையில் வரவேற்பைப் பெற்ற நீரா பானம்; ஒரே நாளில் 80 லிட்டர் விற்பனை

கோவை: கோவை மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நீரா பானம், ஒரே நாளில் 80 லிட்டர் விற்பனையாகியுள்ளது.

கோவை: கோவை மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நீரா பானம், ஒரே நாளில் 80 லிட்டர் விற்பனையாகியுள்ளது.

நீரா பானம் தென்னம்பாளைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் இளம் பழுப்பு நிறமுள்ள தித்திப்பான தாவரச்சாறு ஆகும். இதில் அதிகளவு இரும்புச்சத்தும், பாஸ்பரஸ் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அடங்கியுள்ளதால், இருதய நோய், சிறுநீரக கல் அடைப்பு , கல்லீரல், ஆஸ்த்துமா, இரத்த சோகை போன்ற நோய்களைக் குணப்படுத்தக்கூடியது எனக்கூறப்படுகிறது.

நீரா பானத்தை ஊக்குவிக்கும் வகையில் நேற்று முதல் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நீரா விற்பனையை தென்னை விவசாயிகள் தொடங்கினர். இதனிடையே இன்றும் விற்பனையைத் தொடங்கிய விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தபடி நீரா பானம் விற்பனை அமோகமாக நடைபெற்றது.



இது குறித்து விற்பனை நிலையத்தில் உள்ள ஆர்.ஆனந்த் நம்மிடம் கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் "இது என்னது!" என கேட்டுக்கேட்டு குடிக்கின்றனர். அதன் பின் இதன் மருத்துவ குணம் தெரிந்தவர்கள் மிகவும் விரும்பி குடிக்கின்றனர். இன்று ஒரே நாளில் எனக்கு தரப்பட்ட 80 லிட்டர் நீரா பானம் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. மக்களின் ஆதரவை அடுத்து நாளுக்கு நாள் இதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரேஸ்கோஸ், ஆர். எஸ் புரம் பகுதிகளில் 200 மில்லி லிட்டர் ரூபாய்.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...