கோவை: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் சிக்கிய நடிகை ஸ்ருதி, தன் மீது பண மோசடி புகார் செய்த நபர் தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்திய வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கோவை, சென்னை, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் வெளிநாட்டில் பணியாற்றும் மென்பொறியாளர்களை குறிவைத்து திருமணப் பதிவு மூலம் தொடர்புகொண்டு திருமணம் செய்துகொள்வதாக கூறி சுமார் ரூ. 2,05,85,305 மோசடி செய்ததாக கடலூரைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி , வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன், தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ் ஆகிய 4 பேரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கோவையில் கைது செய்தனர்.
இது தொடர்பாக கோவையில் 4 வழக்குகளும்,நாகப்பட்டினத்தில் 2 வழக்குகளும், சென்னையில் ஒரு வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் ஸ்ருதி உட்பட 4 பேர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஸ்ருதி உள்பட நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்ருதி, தன்னை விசாரித்த காவல் துறை அதிகாரி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக புகார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது, தன் மீது பண மோசடி புகார் தெரிவித்த அமுதன் என்ற நபர், தன்னை காதலிக்குமாறும் இல்லையெனில், தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டிய வீடியோவை ஸ்ருதி தற்போது வெளியிட்டு உள்ளார். இதன் மூலம், அவரை காதலிக்க தான் மறுத்ததால் இதுபோன்று பொய் புகாரை தன் மீது சுமத்தி உள்ளதாக ஸ்ருதி தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர் பேசியிருப்பதாவது :- தன் மீது போடப்பட்டு இருக்கும் வழக்குகள் அனைத்தும் திட்டமிட்ட சதி. அதேபோல, இந்த வழக்கில் வெளிநாட்டில் இருக்கும் வங்கி கணக்கை முடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன் மீது வைக்கப்பட்டுள்ள புகார்கள் பொய் என்பதால் சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன், எனக் கூறினார்.