அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலைமை பெண் காவலர் படுகாயம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலைமை பெண் காவலர் படுகாயம் அடைந்தார்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலைமை பெண் காவலர் படுகாயம் அடைந்தார்.

அன்னூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராகப் பாக்கியம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றப் பணியினை மேற்கொள்ள இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். வழக்கு சம்பந்தமான நீதிமன்றப் பணியினை முடித்து விட்டு, மாலை சிறுமுகை சாலை வழியாக அன்னூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

இந்த நிலையில், சிறுமுகை சாலையில் உள்ள அறிவொளி நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயமடைந்தார். தலை மற்றும் கால், கை என உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...