மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பருவமழை பெய்யவும், உலக நன்மை வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

கோவை, நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்த போதும், மேட்டுப்பாளையத்தில் இந்தாண்டு போதிய மழை பொழிவு என்பது இல்லை. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருக்கும் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன.இதனால், விவசாய பணிகளுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்காத நிலையில், பருவ மழை நன்கு பொழிய வேண்டியும், உலக நன்மை வேண்டியும் மேட்டுப்பாளைய பகுதி பெண்கள் கலந்து கொண்ட 1,008 திருவிளக்கு வனபூஜை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற இந்தப் பூஜையில், தமிழ் முறைப்படி சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் உச்சரித்து பொதுமக்கள் குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். மேலும், மழை வேண்டி வருண பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.