கோவை: கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி சென்ற பயணிகள் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாலக்காடு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை அருகே கோவையில் இருந்து புறப்பட்ட பாலக்காடு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலின் மீது மர்ம நபர்கள் திடீரென கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், ரயில்களில் இருந்த பயணிகள் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தெரிவித்துள்ளனர், ஆனால், சம்பவம் நடந்த இடம் பாலக்காடு கோட்டத்திற்குள் வருவதால் உடனடியாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பாலக்காடு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.