கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க கூட்டம் கூட்டமாக வந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருபவர்களில் சிலர் தாங்கள் அளித்த மனு மீது நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல், அதிகாரிகள் தொல்லை அளிப்பதாகக் கூறி மண்ணெண்ணெய், பெட்ரோல் ஆகியவற்றை கேனில் கொண்டு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட முயல்வது வழக்கமாகி விட்டது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளான திங்கட்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனையும் மீறி சிலர் வளாகத்தில் வெளியே தீக்குளிக்க முயலும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்களின் அனைத்து உடமைகளும், தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மனு அளிக்க வருபவர்களின் உடமைகளும், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் அடையாள அட்டையும் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மனு கொடுக்க திரளாக வருபவர்கள் சிலர் வளாகத்தின் உள்ளே கோஷங்கள் எழுப்புவது, கூட்டம் கூட்டமாக நிற்பதால் மேலும் பலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது கூட்டமாக மனு அளிக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருவர் அல்லது மூவர் மட்டுமே மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், இன்று மனு அளிக்க கும்பலாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், விதிகளை எடுத்துக் கூறிய பிறகு, ஒருசிலர் மட்டுமே உள்ளே மனு அளிக்கச் சென்ற நிலையில், மற்றவர்கள் முனுமுனுத்தபடியே வெளியில் காத்திருந்தனர்.