நாற்பது சதவீத தாய்மார்களே தாய்ப்பால் கொடுக்கின்றனர்: கோயமுத்தூர் பேரெண்டிங் நெட்வொர்க் நடத்திய ஆய்வில் தகவல்

கோவை: கடந்த ஆறு மாத கணக்கெடுப்பின் படி நாற்பது சதவீதம் தாய்மார்களே தாய்ப்பால் கொடுத்த வருவதாக கோயமுத்தூர் பேரெண்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.


கோவை: கடந்த ஆறு மாத கணக்கெடுப்பின் படி நாற்பது சதவீதம் தாய்மார்களே தாய்ப்பால் கொடுத்த வருவதாக கோயமுத்தூர் பேரெண்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுவதின் ஒரு பகுதியாக கோயமுத்தூர் பேரெண்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தங்கள் அமைப்பு மூலம் செயல்படுத்த படும் சேவைகள் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.

இது தொடர்பாக (breast feeding counsellor) தாய்ப்பால் ஆலோசகர் ஸ்வாதி ஜெகதீசன் கூறியதாவது:-



தாய்ப்பாலின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த அமைப்பு தொடங்கபட்டது.

உயிர்துளி என்று பெயர் சூட்டப்பட்டு தற்போது பேஸ்புக், வாட்ஸ்-ஆப் ஆகியன மூலம் 5000-க்கும் மேற்பட்டோரை இணைத்துள்ளோம். மாதந்தோறும் 10 பேரிடம் தாய்ப்பால் பெறப்பட்டு அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இவ்வாறு பெறப்படும் தாய்ப்பால் அனாதையாக விடப்படும் குழந்தைகள் மற்றும் பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தற்போது மக்களிடையே அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

மேலும், சந்தேகம் எழும் தாய்மார்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. கடந்த ஆறு மாத கணக்கெடுப்பின் படி நாற்பது சதவீதம் தாய்மார்களே தாய்ப்பால் கொடுத்து வருகின்றனர். எழுபது, எண்பதுகள் வரை தாய்ப்பால் முறையாக இருந்து வந்தது.

இதன் பின்னர் பாட்டில்களில் பால் கொடுக்கும் முறை வந்த பிறகே தாய்ப்பால் கொடுப்பது குறைந்து விட்டது. இதன் மகத்துவத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 4 மற்றும் 5-ம் தேதி ப்ரோசோன் மாலில் குழந்தைகளுடன் தாய்-சேய் நடனம் நடத்த உள்ளோம். என்று அவர் கூறினார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...