நீலகிரியில் துப்புரவு பணியாளர்களுக்கு 4 மாதங்களாக பணி வழங்கவில்லை என்று புகார் : ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நீலகிரி: நெல்லியாளம் நகராட்சியில் பணி புரியும் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக பணி வழங்கவில்லை என்று கூறி இன்று பணியாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி: நெல்லியாளம் நகராட்சியில் பணி புரியும் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக பணி வழங்கவில்லை என்று கூறி இன்று பணியாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 28 பேர் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கூடலூரைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை, வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீடு எதையும் முறையாக வழங்குவதில்லை என பல முறை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததாகக் கூறும் இவர்கள், கடந்த 4 மாதங்களாக 28 பேருக்கும் பணி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.



இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதாகவும் கூறி இன்று தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்கில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து, அவர்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 1-ம் தேதி முதல் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் திரும்பி சென்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...