கோவை: தமிழகத்தில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களில் பயணிக்கும் போலீசார் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விபத்துக்களைக் குறைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.
இந்த விதிமுறையை போலீசார் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களில் பயணிக்கும் போலீசார் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீசார் காலை 7 மணிக்கு ரோல்காலில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்துள்ளேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகன சாவியை வாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.